×

நூறு நாள் வேலை வழங்கக்கோரி பொதுமக்கள் காத்திருப்பு போராட்டம்

மதுராந்தகம்: அச்சிறுபாக்கம் ஒன்றியம் தின்னலூர் ஊராட்சியில் 300க்கும் மேற்பட்டோர் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் வேலை செய்கின்றனர். இங்கு 55 வயது மேற்பட்டோருக்கு வேலை இல்லை என ஊராட்சி நிர்வாகம் கூறியுள்ளது. கொரோனா ஊரடங்கு காலத்தில், அனைத்து மக்களும் வாழ்வாதாரம் இழந்து, பலர் நூறு நாள் வேலையை நம்பியுள்ளனர். அவர்களுக்கு, வேலை மறுக்கப்பட்டதால், கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், அனைத்து தரப்பு மக்களுக்கும் வேலை வழங்க வேண்டும்.

கொரோனாவால்  பாதிக்கப்பட்டுள்ள அனைவருக்கும் ரூ.7,500 நிவாரணம் வழங்க வேண்டும் என கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில், தின்னலூர் ஊராட்சி அலுவலகம் முன்பு மதுராந்தகம் வட்ட செயலாளர் எஸ்.ராஜா தலைமையில் காத்திருக்கும் போராட்டம் நடந்தது. சங்க மாவட்ட தலைவர் ஜி.மோகனன், நிர்வாகிகள் செல்வராஜ், சுப்பிரமணி, கிருஷ்ணமூர்த்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கிளை செயலாளர் ரமேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தகவலறிந்து அச்சிறுபாக்கம் பிடிஓ அலுவலக அதிகாரிகள், அங்கு சென்று, பேச்சுவார்த்தை நடத்தி, அனைவருக்கும் வேலை வழங்க, ஒரு சில நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

Tags : One hundred day work, public, waiting struggle
× RELATED கோடை விழா: கொடைக்கானல் பிரையண்ட் பூங்கா கூடுதல் நேரம் திறந்திருக்கும்